web log free
May 25, 2026

பிள்ளையான், சுரேஷ் சலே விடயத்தில் நாமல் உறுதி

பிள்ளையான் இந்த நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர உதவிய நபர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட உறுதிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மேலும், நல்லாட்சிக் காலத்தில் பிள்ளையான் ஒரு அரசியல் கைதியாக சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்படிப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க தாம் இருமுறை சிந்திக்க மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தேவைக்காகவா அல்லது டயஸ்போரா அமைப்புகளின் தேவைக்காகவா என்பது குறித்து மக்களுக்கு ஏற்கனவே ஒரு புரிதல் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd