நாட்டின் நலன் கருதி செயற்படத்தக்க ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
'எனக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்த எண்ணமும் இல்லை. எந்த அரசியல் மேடையிலும் ஏறிச் செயல்படத் திட்டமில்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டால், அதை நிறைவேற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
என்னுடன் போராடிய மற்றும் போரில் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளான முன்னாள் படைவீரர்களின் நலனே எனது முதன்மை நோக்கமாகும். நாம் போராடியது எந்த இனத்திற்கும் எதிராக அல்ல பயங்கரவாதத்திற்கே எதிராக இருப்பினும் இன்று வரை சில மேற்கத்திய நாடுகள் எங்களை அநியாயமான முறையில் நடத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


