web log free
June 11, 2026

ஐக்கிய அமெரிக்க விசேட தூதுக்குழு சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய அமெரிக்க ஐக்கிய குடியரசின் House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய அமெரிக்க குடியரசின் House Democracy Partnership தூதுக்குழுவினர் இந்நாட்களில் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகப்பூர்வ விஜயத்திற்கு மத்தியில் இந்நாட்டின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் பலரை சந்தித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவருடனான இந்த சந்திப்பில் இரு தரப்பினரிடையேயான பாராளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் மற்றும் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

அத்துடன், அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்பிலும் இரு தரப்பினரிடையே விரிவான கருத்துப் பரிமாற்றம் இங்கு இடம்பெற்றதோடு, இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையே ஜனநாயக ஒத்துழைப்பும் பரஸ்பர புரிந்துணர்வும் மேலும் வலுப்பெற்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd