web log free
June 18, 2026

செம்மணி புதைகுழியில் தோண்டத் தோண்ட வரும் என்புக்கூடுகள!

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று (17) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை மற்றும் சிறுவர் ஒருவருக்குச் சொந்தமானவை உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்றைய அகழ்வுப் பணிகளின்போது என்புக்கூடு ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வலயம் ஒன்று சான்றுப் பொருளாக மீட்கப்பட்டதுடன், சிறுமி ஒருவரின் பிளாஸ்டிக் காப்பை ஒத்த பொருளும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd