அமைச்சரவையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலும், அமைச்சர் சம்பிக்கவுக்கும் பிரதமருக்கும் இடையிலும், அமைச்சர்களான ராஜித, மங்கள ஆகியோருக்கு இடையில் வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் பாரிய வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் மட்டக்களப்பு கெம்பஸ்,மரண தண்டனை விவகாரம், சிகரெட் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு கெம்பஸை, உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்த பிரதமர், அது தனியார் முதலீடு என்பதால் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொடுவருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கருத்து, ஜனாதிபதியை மட்டுமல்ல, அங்கிருந்த பலரையும் கொதிப்படைய செய்துள்ளது.
எனினும், கொதித்தெழுந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
மட்டக்களப்பு கெம்பஸ் விவகாரத்துக்கு உடனடியாக, ஒரு முடிவை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மரண தண்டனை விவகாரமும் சூடுபிடித்துள்ளது,
எத்தனை தடைகள் வந்தாலும் அதனை நிறைவேற்றியே தீருவேன் என ஜனாதிபதி தெரிவிக்கவே, அதற்கு அமைச்சர் மங்கள சமர வீர கடும் எதிர்ப்பை வெ ளியிட்டார்.
அதுமட்டுமன்றி சீன சிகரெட்டுகளை இறக்குமதி செய்யப்படுவது குறித்து கடுமையான எதிர்ப்பை வௌப்படுத்திய அமைச்சர் ராஜித, அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என வாதிட்டார்.
சிகரெட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதல்ல, சட்டவிரோதமான சிகரெட்டுகளை கைப்பற்றுவதே உரிய நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் ராஜித இதன்போது தெரிவித்துள்ளார்.