web log free
May 23, 2026

அலுவலக ரயில் சேவைகள் பாதிப்பு

 

ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக இன்று (04) எவ்வித அலுவலக ரயில்களும் சேவையில் ஈடுபடாது என, ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததை முன்னிட்டு இந்த வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநிறுத்தம் செய்யபட்ட ஊழியரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ரயில் திணைக்கள பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd