web log free
February 15, 2026

ரயில் சேவைகள் வழமைக்கு

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தடைப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இன்று காலை முதல் ரயில் சேவைகள் வழமையான முறையில் இயக்கப்படுவதாக, ரயில் பிரதான கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ரயில் திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd