web log free
November 26, 2024

முன்னதாக கூடியது அமைச்சரவை

நேற்று மாலை அமைச்சரவையும் பாதுகாப்பு சபையும் அவசரமாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை கூட்டம் வழமையாக செவ்வாய்க்கிழமை இடம்பெறும் நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி, நாளைய தினம் வெளிநாடு செல்லவுள்ளதால், அமைச்சரவை நேற்று கூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வழமையாக புதன்கிழமைகளில் இடம்பெறும் பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி ​தலைமையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd