தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரென அறியப்பட்ட சஹ்ரான் ஹாசீமினுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட ராஜ் கோபால் முதியங்சலகோ இஸ்மயில் மொஹம்மது நஸீர் (வயது 41)இ வெலிமடையில் ககைது செய்யப்பட்ட சாஹூல் ஹமீட் ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மொஹம்மது நஸீர்இ நிக்கரவெட்டிய குற்றத்தடுப்பு பிரிவினரால் மே 1ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுஇ தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையிலேயேஇ பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் நேற்று (09) ஒப்படைக்கப்பட்டார்.
இஸ்லாமிய மதபோதகரான இவர்இ ரஸ்நாயக்கபர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்சாவல பகுதியை சேர்ந்தவர் என்றும்இ நுவரெலியாவில் பயிற்சி முகாமில்இ சஹ்ரானுடன் இணைந்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளைஇ வெலிமடை சில்மியாபுரவில் வைத்து ஜூன் 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 21வயதான சாஹூல் ஹமீட் ஹிஸ்புல்லாஹ்இ ஹம்பாந்தோட்டை ஆயுத முகாமில் ஆயுதப்பயிற்சிப் பெற்றிருந்தார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அவரும்இ பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்இ நேற்று (09) ஒப்படைக்கப்பட்டார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.