web log free
April 27, 2024

சி.ஐ.டிக்கு சென்று வாக்குமூலமளிக்கவும்


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் நேற்று (09) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் குணமடைந்த உடனேயே, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலத்தை வழங்குமாறு பிரதான நீதவான் கட்டளையிட்டார்

மனிதபடுகொலை குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் இருவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும்இ அந்தக் குற்றச்சாட்டுகளை முறையாக நிரூபிக்கும் வகையில் போதுமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என, சுட்டிக்காட்டிய நீதிமன்றம் அவ்விருவருக்கும் பிணை வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், நாரஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலையிலும் மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.


ஆகையால், அவ்விரு வைத்தியசாலைகளுக்கும் சென்று பிணையில் கையொப்பம் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற பதிவாளருக்குக்கு பிரதான நீதவான் பணித்தார். 

.