web log free
June 09, 2026

இராஜினாமா வேண்டாம்: மஹிந்தவுக்கு ரணில் அறிவுரை


மிகவிரைவில் பல தேர்தல்கள் நடத்தப்படவேண்டி இருக்கிறது. ஆகையால் தற்போதைக்கு இராஜினாமா செய்யவேண்டாம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அறிவுரை வழங்கியுள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, பாராளுமன்றத்தில் நேற்று(09) மாலை இடம்பெற்றது இதன்போதே, ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு அறிவுரை வழங்கியுள்ளார்.


தேர்தல்களை நடத்தப்படாவிடின், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துவிடுவதாக, மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 10 July 2019 03:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd