web log free
May 08, 2026

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகின்றது

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் அளிப்பதற்காக இதற்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்த போதும் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd