web log free
June 09, 2026

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் நியமித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜெல் ஹட்ச், சட்டவாளர் ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் முதலாவது கூட்டம் நேற்றுக் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த ஆலோசனைச் சபை தனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சுயாதீனமான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செயல்முறைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd