web log free
April 19, 2024

மஹிந்த தடுத்தும் ரத்ன தேரர் வெளியேறினார்


ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில், ஆனந்த அளுத்கமகேவுக்கும் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாய்த்தர்க்கத்தை அடுத்து, அக்கூட்டத்திலிருந்து ரத்ன தேரர் வெளிநடப்பு செய்தார்.

அவரை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராபஜக்ஷ கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.


எதிரணியினால், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

"அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ரத்ன தேரர் உண்ணாவிரமிருந்து குழப்பிவிட்டார்". என ஆனந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டினார்.

அதே குற்றச்சாட்டை இன்னும் பல உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

எனினும், தன்னுடைய நிலைப்பாட்டை ரத்ன தேரர் தெளிவுப்படுத்தினார்.

அதனை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தமையால், ரத்ன தேரர் அக்கூட்டத்திலிருந்து வெ ளிநடப்புச் செய்தார்.

தலைமைத்தாங்கிய மஹிந்த, அவரை வெ ளியேறவேண்டாமெனக் கேட்டுகொண்டபோதும் அம்முயற்சி கைகூடவில்லை.

"நடந்ததை கதைத்து பிரயோசனம் இல்லை. இனி நடக்கப்போவதை பற்றி பேசுவோம்" என மஹிந்த அறிவுரை கூறினார்.

அதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம். இன்று (10) காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.