அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (10) விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்பட்டு, நாளை (11) வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இந்நிலையில், தமது நிலைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம், அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (09) கூடி ஆராய்ந்தது. அக்கூட்டத்தின் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக, கூட்டமைப்பு வாக்களிக்ககூடாது என்ற நிலைப்பாட்டை முன்வைத்தனர்.
இந்நிலையில், எவ்விதமான இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், அக்கூட்டம் நேற்று(09) நிறைவுற்றது. இன்று (10) மீண்டும் கூடிய ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கவுள்ளது.