உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் பல ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த போதும், தாஜ் சமுத்திரா ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை அது எனக்கு மட்டும் பிரச்சினையில்லை. நாட்டு மக்களுக்கே பெரும் பிரச்சினையாகும் அதுகுறித்து பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தேடிப்பார்க்கவேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பினார்.
தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு கேள்வியெழுப்பினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் குறித்த ஹோட்டலில் யார் யார் இருந்தனர்? ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை? யாராவது அறிவுறுத்தல் செய்தனரா? என்பது குறித்து தேடிப்பார்ப்பது அவசியம் எனக் கேட்டுக்கொண்டார்.