web log free
April 05, 2026

'தனி கூட்டணி உருவாக்குவோம்'

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தால் வேறு புதிய கூட்டணியொன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காவிட்டால் தமது கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனோ இணைந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd