2015ஆம் ஆண்டு பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்தி நல்லாட்சி என்ற ஒன்றை கொண்டுவந்து நாட்டை நாசப்படுத்த ஒன்றிணைந்த குழுவினர் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக ஒன்றிணைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை குறித்து மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியினர் மீது மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையான நிராகரிப்பதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தது, ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் சிக்கலுக்கு உள்ளாகிய அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் வெற்றிக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு நடந்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.