அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தமது
பாவங்களை கழுவும் நோக்கத்தில் தான் அரசாங்கத்துக்கு எதிரான
நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்ததாக ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன
தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக வழங்கிய வாக்குறுதியை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவ்வாறே நிறைவேற்றியதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கேட்கவுள்ள அனைத்து கேள்விகளையும்
பிரதமருக்கு அறிவித்த பின்னரே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
சாட்சியமளிக்க வருவதாக கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்காரணமாக, தெரிவுக்குழுவானது குப்பைகளை கழுவும் தொழிற்சாலை
என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.