நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை
பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற
உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா
விதானகே தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் மீது
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும்
அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள்
நிறைவடையும்வரை அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுக்க
கூடாது என, அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களிடம் கோரிக்கை
விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும்
விடுவிக்கப்பட்டால் மாத்திரமே ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு
பதவியை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றாது என்றும் ஹேஷா
விதானகே குறிப்பிட்டுள்ளார்.