web log free
May 22, 2026

'ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க பிளவுபடும்'


ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் யாரும் இணக்கவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்்கு கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.

எந்தவொரு வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அது சவாலாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சி துண்டுகளாக உடைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd