தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருக் பவாஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், காணொளிகள் அடங்கிய தொலைபேசிகள் ஆகியவற்றுடன அவர் கைதுசெய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடபோவதில்லை என, சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் மொஹமட் பாருக் பவாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர் வெளிநாட்டுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.