நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஊடாக புலனாய்வு அதிகாரிகள் வேட்டையாடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.
மீரிகம ரத்தல்கொட விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் அதற்கு உதவி புரிந்த அரசியல்வாதிகள் இன்றி அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு பெற்றுக்கொடுத்து தெரிவுக்குழுவின் ஊடாக புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகளை அழிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
புலனாய்வு பிரிவுகளின் பட்டியல் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கினால் இதுவரை யாரும் அறிந்திருக்காத புலனாய்வு அதிகாரிகள் வாழ்க்கை அபாயத்துக்கு உள்ளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.