web log free
March 13, 2026

ஆதிவாசி தலைவரின் எதிர்பார்ப்பு

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி எதுவா இருந்தாலும், நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என, ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ, தனது எதிர்ப்பார்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் இனம் மற்றும் மதம் குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அரசியல் என்பது அருவருப்பான விடயமாக தற்போது மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக மக்கள் மத்தியில் பரவி வரும் கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என்றும் பதுளை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் கூறியுள்ளார்.

Last modified on Tuesday, 16 July 2019 02:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd