web log free
June 24, 2026

290 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது

வீடொன்றிலிருந்து ஒருதொகை டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை ஹெடிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சுமார் 290 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரும் அவரது இரு மகன்கள் மற்றும் டெட்டனேட்டர்களை வாங்கி வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவருமாக நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd