web log free
November 26, 2024

சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

 

மன்னார் மீன்வள உதவி இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை 2019 ஜூலை 15 ஆம் திகதி கைது செய்தனர்.

அதன்படி, மன்னார் மீன்வள உதவி இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மன்னார், ஊருமலை பகுதியில் சோதனை நடத்தியதுடன், 70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட 3212 சங்கு ஓடுகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேகநபர் 31 வயதான தலை மண்ணாரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின்படி, 70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சங்கு ஓடுகளை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துடன் வாங்குவது, காண்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மற்றும் சங்கு ஓடுகளை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd