web log free
April 05, 2026

'தேர்தலுக்கு முகங்கொடுக்க எதிரணி தயார்'

மஹிந்த தலைமையில் தேர்தலுக்கு தயார்
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தேர்தலுக்கு எதிரணியினர் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் காலம் கடந்த வாரத்துடன் நிறைவடைந்துள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd