அவன்காட் விவகாரம் தொடர்பில் தான் கைதுசெய்யப்படுவதை தவிர்த்து பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த பிணை மனு மீதான தீர்மானத்தை கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று அறிவித்தார்.
ஆயுதங்கள் கட்டளை சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் தமது நீதிமன்றத்துக்கு இல்லை என, நீதவான் கூறியுள்ளார்.
அவன்காட் தலைவர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அண்மையில் சட்ட மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த விவாகரத்தில் தன்னை குற்றப்புலனாய்வு திணைக்கத்தினர் கைதுசெய்வதனை தடுக்குமாறு கோரி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க, கடந்த 8 ஆம் திகதி பிணை மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.