ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டில் இந்த நியமனங்கள் தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.