அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கைத்தொழில், வர்த்தக பிரதி அமைச்சரான புத்திக பத்திரண ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று (18) பிற்பகல் நடைபெறவுள்ளது.
கோதுமை மாவின் விலையை 8 ரூபாயால் அதிகரிப்பதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
தமது பிரதிநிதிகள் மூவர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பட்டதை அடுத்து, நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 5 ரூபாயால் அதிரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.