அவன்காட் சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க, குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க தன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு கோரி தாக்கல் செய்த முன்கூட்டிய பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க நேற்று நிராகரித்திருந்தார்.
அத்துடன், ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில், பிணை வழங்குவதற்கான அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு இல்லையென, நீதவான் கூறியிருந்தார்.
முன்னதாக, அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் அறிவுறுத்தியிருந்தார்.
அதனையடுதே, சமன் திசாநாயக்கவால், முன்கூட்டிய பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.