web log free
May 22, 2026

கினிகத்தேனையில் தாழிறக்கம்

 

கினிகத்தேனை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மண்சரிவில் 10 வர்த்தக நிலையங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதோடு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேனையில் இருந்து கண்டி நோக்கி செல்லும் வீதியில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வர்த்தக தொகுதி கட்டடம் ஒன்றே மகாவலி கங்கை நோக்கி முழுமையாக சரிந்துள்ளது.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், கினிகத்ஹேன முதல் கண்டி வரையிலான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd