web log free
May 20, 2026

மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆவா குழு உறுப்பினர்கள் இணைந்து பொலிஸாரை தாக்க முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலையடுத்து 05 ஆவா குழு உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களின் 03 வாள்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Last modified on Saturday, 07 September 2019 12:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd