web log free
May 20, 2026

ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி தெரிவுக்குழுவின் அறிக்கை

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெளியிட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முற்பகல் 10.30 முதல் மாலை 6.30 வரை சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது, அரச புலனாய்வு பிரதானி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவீ செனவிரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd