குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி புனித செப்ஸ்டியன் தேவாலயம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விசேட ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளன.