web log free
May 27, 2026

'தேர்தலை யாராலும் தடுக்க முடியாது'

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்த தீர்மானித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd