web log free
June 24, 2026

16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.

மாலை 06.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி கொழும்பு 03, 04, 05, 06 மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

குறித்த காலப் பகுதியில் கொழும்பு, கல்கிஸை, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அந்த சபை அறிவித்துள்ளது.

மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதி, கொட்டிகாவத்த, முல்லேரிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, ரத்மலானை மற்றும் சொய்சாபுர குடியிருப்பு தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கும் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd