web log free
May 10, 2025

மருத்துவ பட்டாதரிகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு


வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோர், பதிவு செய்வதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சபையின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், இலங்கை மருத்துவ சபைக்கு இன்று (23) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்ற 16 பேர் இணைந்து தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களை பெற்றிருந்த போதிலும், தொழில் நிமித்தம் விண்ணப்பிக்கும் போது, இலங்கை மருத்துவ சபை நிராகரிப்பதாக, மனுதாரர்கள் தர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்கள் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா, சட்டத்தரணி சுகத் கல்தேரா, நிரான் எக்னிடெல் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd