சிங்கள தயார்மார்களுக்கு சத்திர சிகிச்சையின் மூலமாக கருத்தடைச் செய்தார். சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் சாபி, குருணாகல் நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், அவருக்கு பிணை வழங்கக் கூடாது, என நீதிமன்றத்துக்கு வெளியில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பெருந்திரளானோர். குழுமியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதன் பின்னர், அவர் வெளியேறும் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, நீதிமன்ற அறைக்குள் வைத்து, சட்டத்தரணி போல, ஆடைகளை அணிந்துகொண்டு, வைத்திய சாபி, நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவித்தன.