தங்களுடைய அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்பது பேரில், மீதமிருக்கும் ஏழு எம்.பிக்களும், தங்களுடைய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை இன்று (26) பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதனடிபடையில், ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகிய இருவரும் அமைச்சுப் பொறுப்புகளையும், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹாரிஸ், அமிர் அலி, அலிசாஹிர் மௌலானா இராஜாங்க அமைச்சரகளாகவும் அப்துல் மஹ்ருப் பிரதியமைச்சர் பொறுப்பையும் இன்று பெற்றுக்கொள்வர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு பின்னர், ஏற்பட்ட அசாதாரணமான நிலைமை மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கில், தங்களுடைய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை கடந்த ஜுன் மாதம் 3ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகிய இருவரும், ஜுலை 9ஆம் திகதி தங்களுடைய பதவிகளை மீளவும் பொறுப்பேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.