web log free
April 05, 2026

விபத்தில் ஒருவர் பலி; ஆறுபேர் காயம்

கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி மற்றும் பஸ் என்பன மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தையடுத்து குறித்த பஸ் கவிழ்ந்துள்ளதுடன், பஸ் மற்றும் லொறியின் சாரதி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd