முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.
ஜுன் மாதம் 3ஆம் திகதி அமைச்சரவை, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தனர்.
அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகிய இருவரும் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், எஞ்சியிருந்த 7 பேரில் நால்வர் தமது பதவிகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுள்ளனர்.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீம் பதவியேற்றார்.
கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சராக ரிஷாத் பதியுதீன் பதவியேற்றார்.
விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக அமீர் அலி செய்யத் முஹம்மத் சிஹாப்தீன் பதவியேற்றார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூப் பதவிபிரமாணம் செய்தார்.
அத்துடன், கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக புத்திக பத்திரண பதவியேற்றார்.