அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை 38 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இன்று மாலை இடம்பெற்ற வாக்களிப்பில் ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் எதிராக வாக்களித்தனர்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சபையில் இல்லை.