web log free
September 20, 2024

“சர்வதேச ஒத்துழைப்பு தேவை”

 

சர்வதேச பயங்கரவதா அச்சறுத்தலுக்கு முகங்கொடுக்க சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என,என, பாதுகாப்பு இராங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசகரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இலங்கையில் பயங்கரவாத தாக்குதலை சஹரான் குழுவினரே நடத்தியமை தெளிவாகியுள்ளது. வெலிசறை முகாமுக்கு அமெரிக்க புலனாய்வு பிரிவினர் சென்றதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார். ஐ.எஸ். பயங்கரவாதம் என்பது சர்வதேச ரீதியில் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, அமெரிக்க மாத்திரமின்றி பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவேதான் அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் செவல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை” என்றார்.