மக்கள் மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் திறனுடைய கருவியை உருவாக்கும் திட்டம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.
மூளை செயல்பாட்டை பேச்சாகப் புரிந்துகொள்ளும் இயந்திர அல்கோரிதம்களை உருவாக்கும் ஆய்வுக்கு ஃபேஸ்புக் நிதி உதவி அளித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் கைகால் வலிப்பு நோயாளிகளில் சிலருக்கு மூளையில் எந்த இடத்தில் வலிப்புக்கான மூலம் உருவாகிறது என்பதை பதிவு செய்வதற்காக மூளையில் மின் முனைகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய நோயாளிகளின் உடலில் இந்த தொழில் நுட்பம் வேலை செய்தது.
நிமிடத்திற்கு 100 சொற்களை புரிந்துகொள்ளும் வகையில் உடம்புக்குள்ளே பொருத்தப்படும் தேவை இல்லாமல், வெளியிலேயே அணிகிற கருவி ஒன்றை கண்டுபிடிக்க முடியும் என்று ஃபேஸ்புக் நம்புகிறது.