web log free
February 04, 2026

மறைந்திருந்துதான் மயில் ஆதரவளிக்குமாம்

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலைய கட்சிகள் இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்னர். இந்நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், திரைமறைவிலிருந்து ஆதரவளிக்கபோகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தான், வெளிப்படையாக ஆதரவளித்தால், பெரும்பான்மை இனக் கட்சிகள், இனகுரோதங்களை ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களை மேற்கொள்ளலாம் என்பதனால், தன்னுடைய கட்சி, திரைமறைவிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க போகிறது என  அந்த தகவல்கள் தெரிவித்தன. 

Last modified on Monday, 05 August 2019 02:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd