web log free
April 06, 2026

மஹிந்தவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய கூட்டமைப்பு எம்.பி

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், குறுஞ்செய்தி ஒன்றை (எஸ்.எம்.எஸ்) அனுப்பியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்குக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, கூட்டமைப்பின் உள்வீட்டு விவகாரங்களை புட்டுபுட்டு வைத்துவிட்டார்.

அது தொடர்பில் கூட்டமைப்பினர் பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, தன்னுடைய மன வேதனையை அந்த எம்.பி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எஸ்.எம்.எஸ் ஊடாக தெரிவித்து நொந்துகொண்டார் என அறியமுடிகிறது. 

Last modified on Thursday, 08 August 2019 13:21
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd