web log free
April 06, 2026

மாலை 3 மணிக்கு நல்ல செய்தி

எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நாட்டுக்கு நல்லசெய்தியொன்று கிடைக்குமென, சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே தன்னுடைய டுவிட்டர் கணக்கில், இவ்வாறானதொரு விளம்பரத்தை பதிவிட்டுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கும் விவகாரம் ஏனைய கட்சிகளிடையே சூடுபிடித்திருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தன்னுடைய வேட்பாளரை முதன்முதலாக அறிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd