web log free
February 04, 2026

கூவ முடியாமல் சேவல் பறந்துவிட்டது

இன்று இடம்பெற விருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும்,  மாநாட்டில் இ.தொ.கா பங்கேற்காது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், இந்தியாவுக்குச் சென்றுவிட்டார்.

தனிப்பட்ட விடயமாகவே, இந்தியாவுக்கு சென்றுள்ளார் என அறியமுடிகின்றது.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை நாளொன்றுக்கு 50 ரூபாயாக அதிகரித்துவிட்டு, தொழிற்சங்கத்தின் சந்தாவை அத்தொகைக்கும் மேலதிகமாக அதிகரித்து கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே,எவ்விதமான முடிவும் எடுக்கமுடியாமல், சேவல் சின்னத்தைக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பறந்துவிட்டார். 

Last modified on Sunday, 11 August 2019 02:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd