web log free
June 24, 2026

டில்லிக்கு புறப்படுகிறார் ஐயா

புதுடெல்லியில் ஒருவாரம் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதன் பின்னரே, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையொன்றுக்காகவே, அவர் புதுடெல்லிக்கு பயணமாகவிருக்கின்றார்.

அதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கவிருக்கின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd